‘வெளியாருக்கு காணி விற்பனை’ – எதிர்ப்பு தெரிவித்து தோட்ட மக்கள் போராட்டம்!

அரசுக்கு சொந்தமான நிலப்பரப்பை நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் வெளியாட்களுக்கு ஒப்படைத்ததாக கூறி நல்லதண்ணி ரிகாடன் பிரதேச மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

23.12.2020 இன்று மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியிலேயே இவ் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து அதன்பின் போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.

நல்லதண்ணி ரிகாடன் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் இரண்டரை ஏக்கர் கொண்ட நிலத்தினை கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இருப்பதாகவும் போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

பல வருட காலங்களாக இப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு ஒரு சிறிய துண்டு நிலம் கூட வழங்கவில்லை. ஆனால் வெளியாட்களுக்கு இந்த நிலப்பரப்பை கொடுத்துள்ளதாகவும், இதனால் தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் போராட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் நில சீர்திருத்த ஆணையத்தின் அதிகாரிகள் கேட்ட போது,

நாங்கள் குறித்த இடத்தினை மேற்படி நபருக்கு வழங்கவில்லை. ஆவணங்களும் தயாரித்துக்கொடுக்கவில்லை. இது எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles