விக்டோரியாவை ஆளப்போகும் குட்டி ராணி

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் பிரீமியராக ஜெஸ் வில்சன் பதவியேற்கவுள்ளார்.

36 வயதான அவர், அரசியலில் மிகக் குறுகிய காலத்தில் உயரிய தலைமைப் பதவியை எட்டியவர்களில் ஒருவராகவும், மாநிலத்தின் இளம் முதலமைச்சராகவும் வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளார்.

விக்டோரியாவில் 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சியைத் தோற்கடித்து, லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஜெஸ் வில்சனின் அரசியல் பயணம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

1990ஆம் ஆண்டு பிறந்த ஜெஸ் வில்சன், மெல்பேர்னின் கிழக்குப் பகுதியில் வளர்ந்தவர். முன்னாள் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ரொன் வில்சனின் மகளான இவர், சிறுவயதிலிருந்தே அரசியல் சூழலுடன் பரிச்சயம் கொண்டிருந்தார்.

மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் சட்டத்துறையில் பட்டம் பெற்ற அவர், தனது 19ஆவது வயதில் லிபரல் கட்சியில் இணைந்தார். பின்னர் மொனாஷ் பல்கலைக்கழக லிபரல் கழகத் தலைவராகவும், விக்டோரிய இளம் லிபரல்களின் தலைவராகவும் பணியாற்றினார்.

கேபிஎம்ஜி நிறுவனத்தில் ஆலோசகராகப் பணியாற்றிய அவர், பின்னர் முன்னாள் அவுஸ்திரேலிய அமைச்சரான ஜோஷ் ப்ரைடன்பேர்க்கின் அலுவலகத்தில் ஆலோசகராகவும், ஆஸ்திரேலிய வர்த்தக சபையின் கொள்கை ஆலோசகராகவும் பணியாற்றினார்.

2022ஆம் ஆண்டு கேவ் தொகுதியிலிருந்து விக்டோரிய மாநில நாடாளுமன்றத்திற்குத் தெரிவான அவர், 2025ஆம் ஆண்டு நவம்பரில் விக்டோரிய லிபரல் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதன் மூலம் அக்கட்சியின் 76 ஆண்டுகால வரலாற்றில் தலைமைப் பதவியை ஏற்ற முதலாவது பெண் என்ற பெருமையையும் பெற்றார்.

தேர்தல் பிரசாரத்தின்போது குற்றச்செயல்கள், வீதிகளின் நிலைமை, வாழ்க்கைச் செலவு மற்றும் மாநிலத்தின் கடன் சுமை உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்திய அவர், சமூக ஊடகங்களையும் தீவிரமாகப் பயன்படுத்தினார்.

அதேவேளை, மெல்பேர்னின் கழிவுநீர் வலையமைப்பைத் தனியார்மயமாக்கும் திட்டம் உள்ளிட்ட அவரது தேர்தல் வாக்குறுதிகள் விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், லிபரல் கூட்டணியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து விக்டோரியாவின் 51ஆவது முதலமைச்சராக ஜெஸ் வில்சன் பதவியேற்கவுள்ளார். இதன் மூலம் மாநில அரசியலில் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles