வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அனுப்புகிறது நாசா

வீனஸ் என்று அழைக்கப்படுகிற வெள்ளி கிரகத்துக்கு 2 விண்கலங்களை அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாசா அனுப்புவதாக அறிவித்துள்ளது.

இந்த திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் 500 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறியதாவது:-

30 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படாத வெள்ளி கிரகத்தை ஆராய்வதற்கான ஒரு வாய்ப்பாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

இவ்விரு திட்டங்களும் வெள்ளி எவ்வாறு நரகத்தைப்போன்றதொரு உலகம் ஆனது, மேற்பரப்பில் ஈயம் உருகும் திறன் வந்தது எப்படி என்பதை ஆராய்வதுடன், இந்த கிரகத்தின் காற்று மண்டலம், பூகோளம் சார்ந்த அம்சங்களும் ஆராயப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வெள்ளி கிரகம் கடைசியாக 1990-ம் ஆண்டு மெகல்லன் ஆர்பிட்டர் மூலம் ஆராயப்பட்டது.

வெள்ளி கிரகம், சூரியனுக்கு அடுத்தபடியாக அதிக வெப்பமான கிரகம் ஆகும். இதன் மேற்பரப்பு வெப்ப நிலை, 500 டிகிரி செல்சியஸ் ஆகும்.

நாசாவின் வெள்ளி கிரக ஆய்வுப்பயணங்கள் 2028-2030 இடையே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles