ஹட்டனுக்கு புண்ணாக்கு ஏற்றிவந்த லொறி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி 12 தொன் புண்ணாக்கு ஏற்றிச் சென்ற கனரக லொறியொன்று, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று (25) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மலைப்பாங்கான பகுதியில் அமைந்துள்ள வளைவொன்றில் கனரக லொறி கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்துக்குள் கவிழ்ந்துள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகி கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles