ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து இன்று காலை பெண்ணொருவரின் சடலம் மீட்ககப்பட்டுள்ளது.

 

சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பெண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எரிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 50ற்கும் 60ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles