ஹட்டன் – மஸ்கெலியா பிரதான வீதியில் கிளன்டில் தோட்ட வைத்தியசாலைக்கு அருகில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று இன்று (27.07.2026) மதியம் விபத்துக்குள்ளானது.
ஹட்டன் பகுதியிலிருந்து மஸ்கெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக கார் ஒன்றே, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகித் தடம் புரண்டு தலைகீழாகக் கவிழ்ந்துள்ளது.
இவ்விபத்தின் போது காரில் பயணித்தவர்கள் எவ்வித காயங்களுமின்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். எனினும், விபத்தினால் காருக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மஸ்கெலியாப் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி ஒருவர், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










