ஹந்தானையில் குளவிக்கொட்டு: 42 மாணவர்கள் பாதிப்பு

ஹந்தான மலையை ஏற வந்த ஜவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய  நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 42 மாணவர்களில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று (01) பிற்பகல் ஹந்தான மலை ஏறும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், மாலையில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்   தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரும் பிரதேசவாசிகளும் இணைந்து காயமடைந்தவர்களை சுவசர்ய அம்புலன்ஸ் வண்டிகளில் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 275 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் இந்த ஹன்தானா மலையேறுவதில் கலந்து கொண்டதுடன் காயமடைந்த மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களை அவர்கள் வந்த பஸ்கள் மூலம் கிராமங்களுக்கு அனுப்பி வைக்க பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles