ஹப்புத்தளை சுகாதார பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா

ஹப்புத்தளை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் புபுது கருணாதிலக்க தெரிவித்தார்.

பாடசாலை மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் அறிக்கை (இன்று) 09-11-2021 வெளியான போது, மேற்படி எட்டு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியிருப்பது தெரியவந்துள்ளது.

ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த தியத்தலாவையில் இரு பாடசாலைகளின் மாணவர்கள் எட்டுப் பேரே, கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளனர்.

அத்துடன், பண்டாரவளை சிறுவர் காப்பகமொன்றில் ஐந்து வயதுகள் மற்றும் அதற்கு குறைவான வயதுகளைக் கொண்டு 27 சிறார்கள், கோவிட் 19 தொற்றுக்கிழக்காகியுள்ளனர்.

மேலும் அக்காப்பகத்தில் பணியாளர்கள் ஐவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. அவ்வகையில் அக்காப்பகத்தில் மொத்தம் 32 பேர் தொற்றுக்கிழக்காகியுள்ளனரென்று பண்டாரவளை சுகாதார சேவை வைத்திய அதிகாரி டி.எம்.ஏ.ஆர். திசாநாயக்க கூறினார்.

இக்காப்பகத்தில் 52 பேருக்கு ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனைகள் மேற்கொண்ட போது, அவர்களில் 32 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் எட்டுப்பேரும், சிறுவர் காப்பகத்தில் 32 பேருமாக 40 பேரும் பொது சுகாதாரப் பரிசோதகர்களின் நேரடிக் கண்கானிப்புக்களுடன், கோவிட் 19 சிகிச்சை நிலையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles