அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்

 

சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவரின் முகநூல் பதிவு வருமாறு ,

” சவுதி அரேபியாவில் தண்டனை அறிவிக்க பட்டுள்ள இலங்கை பிரஜை சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை, மனிதாபிமான, அடிப்படைகளில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் கனிவுடன் பரிசீலிக்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத் அவர்களுக்கு, இலங்கை குடியரசிற்கான சவூதி அரேபிய தூதுவரை நேரடியாக சந்தித்து, அவர் ஊடாக, ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் என, தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை (PCTSP) அங்கத்தவ சகோதர கட்சி தலைவர்களிடம் கோரி உள்ளேன்.

இது தொடர்பில் நாம் பேரவைக்குள் அவசரமாக உரையாடுகின்றோம்.

மேலும், இவ்விடயத்தை நமது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் ஊடாகவும் முன்னெடுத்து, இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாக இவ்விடயத்தை சவூதி அரேபியா அரசிடம் எடுத்து செல்லுமாறும் கோருகிறோம்”- என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles