ஹைதராபாத் அணி 47 ஓட்டங்களால் வெற்றி!

ஐ.பி.எல். 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 31 ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி Delhi Capitals அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

ஹைதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஆரம்பம் முதலே டெல்லி பந்துவீச்சை சிதறடித்தார். வெறும் 47 பந்துகளில் சதம் கடந்த அவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 135 ஓட்டங்களைப் பெற்றார்.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்றது.

243 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி , 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களை மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.

ஹைதராபாத் பந்துவீச்சாளர் ஈஷான் மலிங்கா தனது துல்லியமான யார்க்கர்களால் டெல்லி வீரர்களை நிலைகுலையச் செய்தார். அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியை எளிதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles