இரத்தினபுரிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (21) விஜமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இரத்தினபுரி காளி அம்மன் ஆலயத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்கவிற்கு, இரத்தினபுரி வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தமிழ் கலாசாரத்திற்கு அமைய வரவேற்பளித்திருந்தார்.
இதன்போது, இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமாரின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்குடன், அகில இலங்கை புரட்சி மக்கள் பேரவையின் தலைவர் இராஜரட்ணம் பிரகாஷ் இன்று உத்தியோகப்பூர்வமாக இணைந்தார்.
இரத்தினபுரி மாவட்ட தமிழர்களின் பிரச்சினைகளுக்கான திட்டங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு தெளிவூட்டிய இராஜரட்ணம் பிரகாஷ், தாம் கட்சியுடன் இணைவதற்கான விருப்பத்தையும் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்திருந்தார்.
எஸ்.ஆனந்தகுமாரின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தாம் முன்னின்று உழைப்பதாகவும் இராஜரட்ணம் பிரகாஷ் குறிப்பிட்டார.
இரத்தினபுரி மாவட்டத்தில் நிரந்தர நியமனமற்ற நிலையில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு நியமனங்களை பெற்றுத்தருமாறு இதன்போது கோரிக்கையொன்றும் முன்வைக்கப்பட்டது.
பல வருட காலமாக நிரந்தர நியமனம் வழங்க தவறப்பட்ட பின்னணியிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது