அக்குரணை மண்சரிவில் சிக்கி இருவர் பலி

கண்டி, அக்குரணையில் மண் சரிவில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

அக்குரணை, துனுவில பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது வீட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், தாய், தந்தை மற்றும் மூன்று உடன்பிறந்தவர்கள் இருந்தனர்.

இச்சம்பவத்தில் ஒரு சகோதரனும் சகோதரியும் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு சகோதரர் படுகாயமடைந்துள்ளார்.

அவர் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18 வயதுடையவர்கள்.

Related Articles

Latest Articles