ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (25) சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.
கட்சிமறுசீரமைப்பு நடவடிக்கை, தேசியப்பட்டியல் விவகாரம் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்பதற்கு தயார் என அக்கட்சியின் உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான கருஜயசூரிய நேற்று விசேட அறிக்கை ஊடாக அறிவித்தார்.
இந்நிலையில் கருவின் இந்த அறிவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.










