‘அடிப்படைவாதிகள்’ என அரசு குறிப்பிடுவது, அரசியல் அடிப்படைவாதிகளையே – என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
“ போராடும் உரிமை உள்ளது, எனினும், ஏதேனும் அரசியல் நோக்கில், ஜனநாயகத்துக்கு அப்பால் செல்லும் செயலை அரசியல் அடிப்படைவாதம் என குறிப்பிடலாம்.” – என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ஜனாதிபதி ஊடகப்பிரிவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் அடிப்படைவாதிகள் என குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலகோணங்களில் கேள்விகளை தொடுத்தனர்.
இதற்கு பதிலளிக்கையிலேயே, ‘அரசியல் அடிப்படைவாதிகள்’ என்பதே அரசின் நிலைப்பாடு என அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டார்.
அதேவேளை, ‘அரபு வசந்தம்’ என்ற சொற்பதத்தை அரசு பயன்படுத்தவில்லை. போராட்டக்காரர்கள்தான் பயன்படுத்தினர். அதனையே அரசு சுட்டிக்காட்டியுள்ளது – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதன்போது தெரிவித்தார்.










