அடிப்படை நாட் சம்பளமாக 1000 ரூபாவை வழங்க கம்பனிகள் மறுப்பு – புதிய திட்டம் முன்வைப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் மறுப்பு தெரிவித்துள்ளன. அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கிய வகையில் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கே கம்பனிகள் தயாராக உள்ளன என்று தெரியவருகின்றது.

அதுவும் ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு சில நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அறியமுடிகின்றது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா அவசியம் என வலியுறுத்தப்பட்டுவருகின்றது. தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தொழிற்சங்கங்கள் உறுதிவழங்கியிருந்தன.

ஆனாலும் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவும், ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றுக்கான 105 ரூபாவும், வருகைக் கொடுப்பனவாக 70 ரூபாவும், உற்பத்தி கொடுப்பனவாக 75 ரூபாவும், அதிகளவில் பறிக்கப்படும் தேயிலை கொழுந்திற்காக 75 ரூபாவும் வழங்க கம்பனிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன.

இதன்படி தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரத்து 25 ரூபா கிடைத்தாலும், அடிப்படை சம்பள உயர்வுக்கு கம்பனிகள் தயாரில்லை. கடந்த முறையும் அடிப்படை சம்பளமாக 700 ரூபாவே வழங்கப்பட்டது.

Related Articles

Latest Articles