அடுத்த ஐந்தாண்டுகளில் ஆட்சியை கைப்பற்றுவோம்!

” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் மீண்டெழும். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் மாபெரும் அரசியல் சக்தியாக மாறுவோம். அதற்குரிய வியூகம் வகுக்கப்பட்டுவருகின்றது.” – என்று நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இந்த அரசாங்கம் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தொடர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டுக்கு பல சவால்களை சந்திக்க நேரிடும்.
நாம் ஐந்தாண்டுகள்வரை காத்திருப்போம். அதற்கு முன்னர் அரசாங்கத்தின் இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் எதிரணியில் இருந்தேனும் ஆதரவு வழங்குவோம்.

கட்சி மறுசீரமைக்கப்படும். புதிய தலைவர்கள் வருவார்கள். அடுத்த அரசாங்கத்தை எமது கட்சிதான் அமைக்கும். பலமான கூட்டணி அமைக்கப்படும். ஜனாதிபதிகூட எமது கட்சியில் இருந்துதான் தெரிவுசெய்யப்படுவார்.

ஜனவரி மாதம் முதல் கிராமங்கள்தோறும் செல்லவுள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles