‘ஊவா இளைஞர்களின் இதயத்துடிப்பை நனவாக்கும் அபரீத முயற்சியில் செந்தில் தொண்டமான்’
– பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அங்கீகாரம் –
ஊவா மாகாணத்தில் 70 தோட்டப் பிரிவுகள் காணப்படும் நிலையில் ஒவ்வொரு 7 தோட்டப் பிரிவுகளுக்கும் ஒரு தொழிற்சாலையை உருவாக்குவது தொடர்பிலான செந்தில் தொண்டமானின் எண்ணக்கருவுக்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் ஹப்புத்தளையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின் போது ஊவாவில் கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட வேட்பாளர் செந்தில் தொண்டமான், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தார். இதுதொடர்பில் பிரதமருடன் இடம்பெற்றுள்ள கலந்துரையாடலின் போதே 7 தோட்டப் பிரிவுகளுக்கு ஒரு தொழிற்சாலைவீதம் அமைப்பதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஐந்தாண்டுகாலப் பகுதியில் ஊவா இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் அவர்களின் வசிப்பிடங்களை அண்டியே உருவாக்கப்படும். கொழும்பிலும் நாட்டின் ஏனைய புறநகர் பகுதிகளிலும் குறைந்த சம்பளத்திற்கு மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் பணியாற்றிவரும் ஊவா இளைஞர், யுவதிகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகள்; பொற்காலமாக மாறவுள்ளது.
தோட்டப்புறங்களில் பயன்படுத்தாமல் காணப்படும் 5 ஏக்கர் காணியை கொண்டு ஒவ்வொரு தொழிற்சாலையும் அமைக்கப்படும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற கம்பனிகளை ஒரு வருடத்திற்கு இரண்டு என்ன அடிப்படையில் அமைப்பதற்கான உத்தரவாதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, செந்தில் தொண்டமானிடம் வழங்கியுள்ளார்.
இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு தொழிற்சாலையில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்புகளை பெறுவர். அனைவருக்கும் அரசப் பணியை வழங்குவதென்பது முடியாத காரியம். ஒரு தோட்டத்தில் 10 சதவீதமானவர்களுக்கு அரசப் பணிகளை வழங்க முடியும். ஆனால், தனியார் துறைமூலம் அதிக சம்பளத்துடன், இவ்வாறான மாற்றுவழி தொழில்வாய்ப்புகளை உருவாக்க முடியும். இதுவரை எந்தவொரு மலையக தலைமையும் கண்டிறாத கனவையே நனவாக்கும் முயற்சியை செந்தில் தொண்டமான் முன்னெடுத்துள்ளார்.
ஆகவே, படித்துவிட்டு உரிய தொழில்வாய்ப்புகளின்றி கொழும்பில் கடினமான சூழலில் பணியாற்றிவரும் ஊவா இளைஞர்களும் தோட்டப்புறங்களில் வேலைவாய்ப்பின்றி அல்லல்படும் இளைஞர், யுவதிகள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமது சொந்த ஊரியில் நெஞ்சை நிர்த்துக்கொண்டு தன்மானத்துடன் செல்வதற்கான வாய்ப்புகளை அமையபோகும் பலமான அரசாங்கத்தின் மூலம் செந்தில் தொண்டமான் உறுதியாக ஏற்படுத்திக்கொடுப்பார்.