அடுத்த 36 மணிநேரத்துக்குள் பாகிஸ்தான்மீது இந்தியா தாக்குதல்!
அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்தியா ‘சர்ஜிகல் ஸ்டிரைக்” தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான தகவல் உளவுத்துறையிடம் இருந்து கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிரான கடும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின் எதிர்வினைகளை கண்ட பாகிஸ்தான், தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் நடக்கும் என்று எதிர்பார்ப்பு, அதை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் பதற்றம் காணப்படுகிறது.
இந் நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் இருந்து 36 மணி நேரத்திற்குள் இந்தியா ‘சர்ஜிகல் ஸ்டிரைக்” தாக்குதல் நடத்தலாம் என்ற நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் அட்டாயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு ஆக்கிரமிப்புக்கும் தீர்க்கமான பதில் அளிக்கப்படும். பிராந்தியத்தில் ஏதேனும் கடுமையான விளைவுகள் ஏற்பட்டால் அதற்கு இந்தியா பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.