அடை மழையால் 50 இற்கு மேற்பட்ட பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 60 வீதம்வரை அதிகரித்துள்ளது எனவும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை, நாட்டில் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
