ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை மட்டுக்கலை சந்திக்கு அருகில் இன்று பிற்பகல் காரொன்று விபத்துக்குள்ளானது.
தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கிசென்ற கார் ஒன்றின் குறுக்கே திடீரென ஒரு நாய் பாய்ந்தபோது, அதனைப் பாதுகாக்க முயன்ற சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் கார் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
காரில் பயணித்தவர்களுக்கு பாதிப்பில்லை என தெரியவருகின்றது.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படுவதால், வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
