பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் நடிகை ஓவியாவும் ஒருவர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் வெற்றிப்படங்கள் எதையும் கொடுக்கவில்லை என்ற போதும், அவரது ரசிகர்கள் இப்போதும் அதே அளவில் இருப்பது உண்மையிலேயே ஆச்சர்யமான விசயம் தான்.
இதனாலேயே அவர் சமூகவலைதளத்தில் போடும் பதிவுகள் பெரும்பாலும் வைரலாகி விடுகின்றன.
அந்தவகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காலில் கொலுசு போன்று போட்டுள்ள டாட்டூவை காட்டியுள்ளார். ஒரு பாம்பு அதன் வாலை அதுவே விழுங்குவது போன்று அந்த டாட்டூ உள்ளது. மை லிட்டில் மான்ஸ்டர் என அந்த டாட்டூ வீடியோவை அவர் பதிவிட்டுள்ளார்.
My little monster ? pic.twitter.com/kDEE2uoUHR
— Oviyaa (@OviyaaSweetz) September 21, 2020