அணு சக்தி தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளில் இணைய அமைச்சரவை அனுமதி

அணுப் பொறுப்புக்கள் தொடர்பான பிரதான இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளில் இலங்கையும் ஒரு தரப்பினராவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கையின் எதிர்கால வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அணு வலுச்சக்தி மாற்று வழிமுறையாகக் கொள்வதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு இணங்கியொழுகி அணுச்சக்தியைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்தல் பற்றி விடயங்களை ஆராய்வதற்காக நெறிப்படுத்தல் குழுவொன்றும் , 09 செயற்பாட்டுக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

குறித்த செயற்பாட்டுக் குழுக்களால் தயாரிக்கப்பட்டுள்ள சுயமதிப்பீட்டு அறிக்கை பற்றி சர்வதேச அணு வலுசக்தி முகவராண்மை நிறுவனம் வழங்கியுள்ள பரிந்துரைகளுக்கமைய, அணுச்சக்தியில் மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் கருத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச்
செல்வதற்கு இலங்கைக்கு இயலுமை உண்டு.

அதற்கமைய, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் அணுப் பாதிப்புக்களுக்கான குடியியல் பொறுப்புக்கள் பற்றிய வியானா சமவாயம் மற்றும் அணுப் பாதிப்புக்களுக்கான குறைநிரப்பு இழப்பீட்டு சமவாயத்தின் தரப்பினர்களாவதற்கு பொருத்தமானதென அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சமவாயங்களில் தரப்பினராவதற்கு எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மற்றும் மின்சக்தி வலுசக்தி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles