” நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்தார்.” – என்று சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் .
எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டுமானால் அரசொன்று இருக்க வேண்டும். அந்த இடைக்கால அரசை அமைப்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், ஸ்தீரமான அரசொன்று அமையும்பட்சத்திலேயே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறலாம் எனவும் தயாசிறி குறிப்பிட்டார்.
