அட்டுளுகம பகுதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாணந்துரை நீதவான் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அட்டுளுகம பகுதியில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளரை அழைத்துவர செல்ல முயற்சித்த போது, குறித்த நபர் பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியதோடு, வாகனத்தில் செல்லவும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.