பதுளை தமிழ் மகளிர் வித்தியாலயத்தின் அதிபர் பவானியை முழந்தாளிடச் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்கவை, நிரபராதியாக்கி விடுவிக்க பதுளை நீதிவான் சமிந்த கருணாதாஸ உத்தரவிட்டுள்ளார்.
மத்தியஸ்த சபையில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாக நீதிவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானியின் முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், குறித்த வழக்கை மத்தியஸ்த சபைக்கு மாற்றுவதற்கு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி, பதுளை மத்தியஸ்த சபையில் இந்த விடயம் அழைக்கப்பட்டபோது, இரு தரப்பினரின் இணக்கப்பாட்டுக்கு அமைய, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
எம். செல்வராஜா பதுளை நிருபர்










