அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர் போராட்டம்!

அதிபர் – ஆசிரியர்களின் வேதன முரண்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியும், அதிபர், ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் பெற்றோர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதுளை மாவட்டத்தில், பசறை, லுணுகல, கோணக்கலை, பதுளை, ஹாலிஎல உள்ளிட்ட பிரபல நகர மற்றும் கிராம மட்டத்தில் பெற்றோர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பசறை தமிழ் தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று காலை 8.30 மணியளவில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியும் அதிபர், ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆதரவை வெளிப்படுத்தினர்.

நிருபர் – நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles