அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாகச் செல்லும்  பொது போக்குவரத்து பஸ்கள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு  அறிவிக்குமாறு மக்கள் கோரப்பட்டுள்ளனர்.

24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அதிவேகமாகச் செல்லும் பஸ்கள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles