அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு;

லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் ஒரு கிலோ கிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Related Articles

Latest Articles