எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேரடி விவாதத்துக்கு வருமாறு சவால் விடுத்துள்ளார் ஜே.வி.பியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும், ஜே.வி.பியினருக்கும் இடையில் அரசியல் களத்தில் தற்போது கடும் சொற்போர் மூண்டுள்ளது. இரு தரப்பினரும் சரமாரியாக சொற்கணைகளைத்தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையிலேயே சஜித்தை நேரடி விவாதத்துக்கு வருமாறு அனுர அழைத்துள்ளார்.
” நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் மற்றும் அபிவிருத்தி என்பன தொடர்பில் விவாதிக்க நாம் தயார். முதலில் இந்த விவாதத்துக்கு சஜித் வரட்டும். அதன் பிறகு இரு தரப்பு பொருளாதாரக்குழுக்கள் விவாதிக்கட்டும்.” – எனவும் அனுர குமார குறிப்பிட்டார்.










