” தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.” – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விடுமுறை வழங்கப்படும் நாளை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமை நாளில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையை முன்னெடுக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்










