“அனோஜன் சிவராசாவுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு ஒரு நாடாக நாம் கோரிக்கை முன்வைக்கின்றோம்.
இந்த விடயம் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புபட்ட விடயமாகும். அரசாங்கத்துக்கே முன்னுரிமை வழங்கப்படும். எனவே, இவ் விவகாரத்தை அரசாங்கமே மிகவும் பொறுப்புடன் கையாள வேண்டும்.
இப்பிரச்சினையை அரசியல் மயமாக்கி, வெளிவிவகார அமைச்சுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதால் எதுவும் நடக்கப்போவதில்லை.
அனோஜனை விடுவித்துக்கொள்ளும் முயற்சிக்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்குவோம்.”
-இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தில் இன்று கூறினார்.
