அப்புத்தளையில் சிறுத்தைப்புலி பலி!

அப்புத்தளை – யாகலபெத்த வழியில் விபத்தொன்றில் சிக்கி சிறுத்தை புலியொன்று பரிதாபகரமாக பலியான சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாகலபெத்த பெருந்தோட்ட பகுதியிலிருந்து தப்பியோடி வந்த சிறுத்தை புலி பாதையில் சென்ற வாகனமொன்றில் மோதி பலியானது. இது குறித்து அப்பகுதி மக்கள் அப்புத்தளை பொலிசாருக்கும் வனஜீவி திணைக்களத்தினருக்கும் அறிவித்தனர். இ

தையடுத்து அவர்கள் அவ்விடத்திற்கு விஜயம் செய்து பலியான சிறுத்தை புலியை வனஜீவி திணைக்களத்தினர் மீட்டுச்சென்றனர். பொலிசாருக்கும் வனஜீவி திணைக்களத்தினரும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிறுத்தை புலி மீது வாகனம் குறித்தும் எத்தகைய தகவலும் கிடைக்கவில்லை. இச் சிறுத்தை புலி இரண்டறை அடி நீளமானதாகும்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles