அமெரிக்காவில் கொரோனா தாண்டவம்! 93 லட்சத்தை கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் ஒரு நாளில் புதிய உச்சம் தொட்டுள்ளதுடன், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரசானது கண்டறியப்பட்டாலும், பின்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனினும், வல்லரசான அமெரிக்கா கொரோனா பாதிப்புகளில் சிக்கி மீள முடியாமல் தத்தளித்து வருகிறது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் பணிகள் மும்முரமுடன் நடைபெற்ற போதிலும், கொரோனா பாதிப்புகளும் அதன் கைவரிசையை காட்டி வருகிறது. இதுபற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கைலக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாள் ஒன்றுக்கு கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி, 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இது அதற்கு முந்தைய நாளில் 91 ஆயிரம் என்ற அளவை மிஞ்சியுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 16 ஆயிரத்து 297 ஆக உயர்வடைந்து உள்ளது. இதனால் மற்றொரு அலை ஏற்பட கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

தொடர்ந்து பல பகுதிகளில் இந்த வாரத்தில் ஊரடங்கை பிறப்பிக்க அதிகாரிகள் முடிவு செய்ய கூடும் என கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles