அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த டிக்டொக்!

அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

டிக்டொக் செயலி உலகளவில் பிரபலாமக உள்ளது. சீனாவைச் சேர்ந்த ‘ பைட்டான்ஸ்’ என்ற நிறுவனம் இந்த செயலியை நிர்வகித்து வருகிறது.

அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் குறித்த செயலிக்கு ஜோ பைடன் அரசு சமீபத்தில் தடை விதித்தது.

இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டொக்கிற்கு எதிராக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதனையொட்டி நேற்று அமெரிக்காவில் மேற்படி செயலியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு அதன் நிறுவனம் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி இருந்தது.
அதில் டிக்டொக் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிக்டொக் செயலியை வழக்கம்போல் செயல்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

டிக்டொக் சேவைக்கு தடை விதித்து அமெரிக்கா கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய ஜனாதிபதி டிரம்ப், டிக்டாக் செயலி தடைக்கு 90 நாட்கள் விலக்கு அளிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்கும் நிலையில் அமெரிக்காவில் டிக்டொக் செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுதொடர்பாக டிக்டொக் நிறுவனம் ” எமது சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவை வழங்கிய டொனால்ட் டிரம்புக்கு நன்றி. நீண்ட கால தீர்வுக்கு டிரம்ப் உடன் இணைந்து பணியாற்றுவோம்ஷ” என்று தெரிவித்துள்ளது.

 

Related Articles

Latest Articles