அமெரிக்கா, ரஷ்ய ஜனாதிபதிகளைவிட சிறந்த தலைவரே ரணில் – வஜிர புகழாரம்

அமெரிக்கா, ரஷ்யா என்பன பெரிய நாடுகளாக இருக்கலாம். ஆனால் புடின், ஜோபைடன் ஆகியோரைவிடவும் சிறந்த தலைவர்தான் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் மட்டுமே இலங்கைக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க முடியும் – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அனைவரும் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி தொடர்ச்சியாக அழைப்பு விடுத்துவருகின்றார். நாம் பிளவுபட்டு நின்றால்தான் வெளிநாட்டு சக்திகள் நாட்டுக்குள் நுழையும். அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும். அப்போது ஜனாதிபதியால் பொருளாதார சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்க முடியும்.

நாம் பிரிந்து நின்றால் நாடு விழும். நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதால்தான் நாம் அவர் பின்னால் நிற்கின்றோம். அவர் 100 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை நிச்சயம் பெறுவார்.

அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா ஜனாதிபதி புடின் ஆகியோரைவிடவும் ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர் என நான் குறிப்பிட்டிருந்தேன். ஆம். புடின் 1999 இல்தான் அரசியலுக்கு வந்தார். நாடுகள் பெரிதாக இருக்கலாம், சொத்துகள் இருக்கலாம். பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால் எமது நாட்டு தலைவருடன் ஒப்பிட முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் செல்லும்போது, அவர் ஜனாதிபதி ஆவார் என கூறினோம். மறுநாள் என்னை பைத்தியம் என்றார்கள். நடந்தது என்ன? ஏனெனில் ரணிலின் நகர்வுகள் எமக்கு தெரியும். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles