அமெரிக்க தூதுவர் பதவிக்காக எம்.பி. பதவியை துறக்கும் மஹிந்த!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதற்கு உத்தேசித்துள்ளார்.

இவ்வாறு பதவி விலகவுள்ள அவர் அமெரிக்கா மற்றும் மெக்ஸிக்கோவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.

மஹிந்த ஆட்சியின்போதும், நல்லாட்சியின்போதும் அரசுகளின் சார்பில் இவர் ஜெனிவா விவகாரத்தைக் கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரவு – செலவுத் திட்டத்தின் பின்னரே அவர் பதவி விலகுவார் என பிந்திக் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles