ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை ஜப்பானுக்குச் செல்லவுள்ளார்.
அதற்கு முன்னர் புதிய அமைச்சர்கள் 12 பேரை நியமிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதும், ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்று திரும்பிய பின்னரே அதனை மேற்கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று தெரியவருகின்றது.
மணிலாவில் ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள ரணில், அதற்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவது அந்தப் பேச்சுக்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜனாதிபதி கருதுகின்றார் என்று தெரிகின்றது.










