உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் கவலையில் உள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறவுள்ளது என கடந்தகாலங்களில் தொடர்ச்சியாக தகவல்கள் பரவிய நிலையில், தமக்கு பதவிகள் கிடைக்கும் என மொட்டு கட்சியின் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
மொட்டு கட்சியில் யார், யாருக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற பெயர் பட்டியலும் ஜனாதிபதிக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும், அமைச்சரவை மாற்றம் தற்போது நடைபெறாது என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
