இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான வரவிருக்கும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (ICC World Test Championship) டெஸ்ட் தொடருக்குப் பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படுவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், முதல் போட்டி ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பு SSC மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
ரசிகர்கள் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைவாயில் 4 வழியாக இலவசமாகச் செல்லலாம். அதேபோல் கொழும்பு SSC மைதானத்தில் 3, 4, 5, 7 ஆகிய நுழைவாயில்கள் திறக்கப்பட்டிருக்கும்.
இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான இந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்கவும், அனுபவிக்கவும் கிரிக்கெட் ரசிகர்கள், இளம் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஶ்ரீலங்கா கிரிக்கெட் அழைப்பு விடுத்துள்ளது.










