எயார்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு விவகாரத்துடன் தொடர்புடைய பணமோசடி வழக்கு விசாரணைகள் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ச , பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் சந்தேகநபராக இன்றைய தினம் (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக அவரை செப்டம்பர் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடுகள் குறித்தே விசாரணை இடம்பெற்று, கைது இடம்பெற்றுள்ளது.
