அமைச்சரவை மறுசீரமைப்பை விமர்சிக்க மொட்டு கட்சிக்கு உரிமை இல்லை – மனுஷ சீற்றம்

அமைச்சரவை மாற்றத்தை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அமைச்சரவை மாற்றத்தை அரசின் பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் எம்.பி. நேற்று தெரிவித்திருந்தார். சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெலவை மாற்றியது முற்றிலும் தவறான விடயம் என்றும அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இது தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் அமைச்சருமான மனுஷ நாணயக்கார கருத்துத் தெரிவிக்கையில்,

“அமைச்சரவையின் தலைவர் ஜனாதிபதியே. எனவே, அமைச்சர்களை நீக்குவதற்கும், அமைச்சர்களை மாற்றுவதற்கும், புதியவர்களை நியமிப்பதற்கும் ஜனாதிபதிக்கு முழு அதிகாரம் உண்டு. அதற்கமைவாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். அவசியம் கருதி இந்த மாற்றத்தை அவர் செய்துள்ளார். இதனை விமர்சிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எந்த உரிமையும் கிடையாது. மொட்டுக் கட்சி மாத்திரம் இந்த அரசின் பங்காளிக் கட்சி அல்ல. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எனப் பல கட்சிகள் இந்த அரசின் பங்காளிக் கட்சிகளாக உள்ளன.

இந்த அரசின் தலைவரும் அமைச்சரவையின் தலைவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே. ஜனாதிபதியின் அதிகாரத்தை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளருக்கு இதை விட வேறு விளக்கத்தை என்னால் வழங்க முடியாது.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles