அமைச்சு பதவிக்காக பல்டி அடித்த நிமலுக்கும், அமரவீரவுக்கும் மைத்திரி ஆப்பு!

கட்சி முடிவைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர ஆகியோர் கட்சியில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்படுவார்கள் – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரம் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இவ்விருவரும் சுதந்திரக்கட்சியில் சிரேஷ்ட உப தலைவர் பதவியை வகித்தனர்.

எனினும், புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி, அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர். இந்நிலையிலேயே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ளும் அனைவரையும், கட்சியின் பதவிகளிலிருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles