” புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை.”
இவ்வாறு முன்னாள் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரத்துக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக இளைஞர்களைக் கொண்ட அமைச்சரவையை நியமிக்கும் படியும் அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் தாம் அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்கப் போவதில்லை எனவும் அவர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்காக 15 பேரைக் கொண்ட அமைச்சரவையை நியமிக்கும் படியும் நெருக்கடி நிலை தீர்ந்ததும் அமைச்சரவையை விஸ்தரிக்கலாம் எனவும் பந்துல குணவர்தன ஆலோசனை வழங்கியுள்ளார்.
