அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்மித்த பகுதிகளில் இன்று (19) வெள்ளிக்கிழமை மதியம் 11.44 மணியளவில் சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.0 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறியினும் குறித்த நிலநடுக்கத்தில் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.