அரசமைப்பு பேரவையில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக செயற்பட்ட முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா அப்பதயில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதற்கு பதிலாக ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசமைப்பு பேரவையின் தலைவராக சபாநாயகரே செயற்படுவார்.பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரும் அதில் அங்கம் வகிப்பார்கள்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் புதிய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகும்வரை அரசமைப்பு பேரவை செயற்பட முடியும்.
உயர் பதவிகளுக்கான நியமனங்களை அரசமைப்பு பேரவையே அங்கீகரிக்கும். இந்நிலையிலேயே அரசமைப்பு பேரவையில் இருந்து நிமல் சிறிபால டி சில்வா நீக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சிகாலத்தில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக நிமல் சிறிபால டி சில்வா செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.










