அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து “ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பு போராட்டம்

அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (24.04.2022) இளைஞர், யுவதிகள் அட்டன் மணிக்கூட்டு கோபுரத்த்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஒன்றிணைந்த இளமை அட்டனில் தொடக்கம்” என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் அட்டன் பகுதியில் உள்ள தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றில் உள்ள பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தை அட்டன் எம்.ஆர். நகரத்தில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பித்து, அதன்பின் ஊர்வலமாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

உலகத்தின் முன் தாய் நாட்டை கேவலமாக்காதே, பசிக்கு நிறம் மதம் கிடையாது, விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும், ரம்புக்கனை இளைஞனுக்கு நீதி வேண்டும், சிறார்களின் கல்வியை நாசம் செய்யாதே, போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சி படுத்திய வண்ணம், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles