அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்திடம் முன் மொழிவுதிட்டமொன்றை முன்வைப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உத்தேசித்துள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிப்பதற்காக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள ’20’ ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்துவரும் தமிழ் முற்போக்கு கூட்டணி, அது தொடர்பில் மலையக புத்திஜீவிகள் மற்றும் சட்டநிபுணர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கிவருகின்றது.
அந்தவகையில் ’20’ எவ்வாறு அமையவேண்டும், அதில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் போன்ற விடயங்களையே கூட்டணி, முன்மொழிவாக முன்வைக்கவுள்ளது.
அதேவேளை, மலையக மக்கள் தொடர்பில் சில விசேட கோரிக்கையையும் அரசாங்கத்திடம் முற்போக்கு கூட்டணி முன்வைக்கவுள்ளது. இவற்றுக்கு அரசாங்கம் வழங்கும் பதில்களை அடிப்படையாகக்கொண்டே ’20’ தொடர்பில் கூட்டணியின் அரசியல் உயர்பீடம்கூடி இறுதி முடிவை எடுக்கும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும்பட்சத்தில் முற்போக்கு கூட்டணி அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் விதத்தில் ’20’ஐ ஆதரிக்ககூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.