“மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசியலில் இருந்து விடைபெறும் முடிவை எடுத்துவிட்டேன்.” – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 1994 ஆம் ஆண்டு மாகாணசபை ஊடாக மக்கள் சேவையை ஆரம்பித்தேன். கடந்த 3 தசாப்தங்களாக நாவலப்பிட்டிய உட்பட கண்டி மாவட்டத்தில் பல சேவைகளை முன்னெடுத்தேன். தற்போது மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து அரசியலில் இருந்து ஒதுங்குகின்றேன்.
அரசியலுக்கு என்னை அழைத்து வந்தவர்கள், எனக்கு ஆதரளித்தவர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள்.” – என்றார்.










