அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை – அநுர

” சுகாதார அமைச்சருக்கு எதிராக அல்ல, இந்த அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.” – என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

” இலாபத்துக்காக தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. எனவே, சுகாதார அமைச்சரை பதவி நீக்கிவிட்டு, அது தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.

மக்கள் உயிரிழக்கின்றனர், கண்பார்வையை இழக்கின்றனர், இழப்பீடு வழங்கி இப்பிரச்சினையை தீர்க்க முடியுமா? எனவே, மக்கள்மீது அக்கறை இல்லாத, சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த தவறிய இந்த அரசையே விரட்டியடிக்க வேண்டும். அரசுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles