“மக்கள் எதிர்நோக்கும் அன்றாட பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்ளாத அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்பாடு செய்துள்ள கண்டன பேரணி நாளை முற்பகல் 10 மணிக்கு தலவாக்கலை நகரில் இடம்பெறவுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்டன பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச உட்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
